"2021 இல் நடிகர் விஜயின் ஆட்சி" மதுரையை பரபரப்பாக்கும் போஸ்டர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் 1967 ல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி;2021 ல் தளபதி விஜய் ஆட்சி என அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு உருவாகியுள்ளது.


Advertisement

image

நடிகர் விஜய்க்கு தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் ரசிகர் மன்றங்கள் உள்ள நிலையில், பெரிய அளவில் ரசிகர் பட்டாளமும் உள்ளது. நடிகர் ரஜினிகாந்த்க்கு பிறகு நடிகர் விஜய் தான் சூப்பர் ஸ்டார் எனவும், தமிழ் சினிமாவின் ப்ளாக் பஸ்டர் வசூல் நாயகன் எனவும்  கூறப்படுகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தொடர்ச்சியாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் பேசும் வசனங்கள் அவ்வப்போது விவாதப்பொருளாகி அதற்கு ஆளுங்கட்சியினரும், அமைச்சர்களும் எதிர்வினையாற்றுவார்கள். அவரது ரசிகர்கள் அவ்வப்போது விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில்தான் மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, பேசு பொருளாகியும் உள்ளது. 1967 இல் அறிஞர் அண்ணாவின் ஆட்சி; 2021 இல் தளபதி விஜய் அண்ணாவின் ஆட்சி என மதுரை நகர் முழுவதும் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement