[X] Close >

60 ஜிபி இலவச டேட்டா, பேடிஎம் கூப்பன்கள்: இது ஜியோனியின் அதிரடி ஆட்டம்..!

Gionee-partners-with-Reliance-Jio-for-60GB-free-4G-data-offers

ஜியோனி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு சில ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 60 ஜிபி வரை இலவச டேட்டா வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.


Advertisement

சீன நிறுவனமான ஜியோனி நிறுவனமும் - ரிலையன்ஸின் ஜியோவும் இணைந்து புதிய சலுகைகளை அறிவித்தள்ளது. அதன்படி, ஜூன் 16 ஆம் தேதிக்கு பின் வாங்கிய ஜியோனி pioneer P5L அல்லது ஜியோனி P7 ஃபோன்களுக்கு 2 ஜிபி 4ஜி கூடுதல் டேட்டா வழங்கப்படும். ஜியோனி எலைஃப் S6, ஜியோனி எலைஃப் s7, ஜியோனி மாரத்தான் M5, ஜியோனி Sபிளஸ், ஜியோனி s6எஸ், ஜியோனி F103 ப்ரோ, ஜியோனி மாரத்தான் M5 லைட் சிடிஎம்ஏ, ஜியோனி மாரத்தான் M4, மாரத்தான் M5 லைட், ஜியோனி P7 மேக்ஸ், ஜியோனி F103 வாங்குபவர்களுக்கு 5 ஜிபி அளவு இலவச கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், ஜியோனி A1, ஜியோனி மாரத்தான் M5 பிளஸ், ஜியோனி S6 ப்ரோ, ஜியோனி எலைஃப் E8 ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குபவர்களுக்கு 10 ஜிபி அளவு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள் வரும், 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 6 முறை 309 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 60 ஜிபி வரை கூடுதல் இலவச டேட்டாவை பெறலாம்.

இதேபோல், ஜியோனி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் வரை கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close