தனிநபர்கள் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள், நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் விதித்த தடையை தளர்த்த இயலாது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் செல்ல எந்த தடையும் விதிக்கவில்லை. வழிபாடு நடத்துவதை தடை செய்யவேண்டும் என்பது அரசின் எண்ணமல்ல. ஐந்து மாதங்களாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன. மெரினா மூடப்பட்டுள்ளது. வேறு நீர்நிலைகளில் கரைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஊர்வலம் நடத்தப்படாது எனவும் பொது இடங்களில் சிலை வைத்து வழிபட மட்டுமே அனுமதி கேட்கிறோம். முழு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என இந்து முன்னணி, தமிழ்நாடு சிவசேனா கட்சி உத்தரவாதம் அளித்தது.


Advertisement

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் ...

இதையடுத்து வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனிநபர்கள், நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்கக்கூடாது ஊர்வலமாக செல்லக்கூடாது எனவும் சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement