எமோஜியை கேப்ஷனாக வைத்து தனக்கு நிச்சயமானதை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர்.


Advertisement

image

நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருங்கால மனைவி வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் அவர் இருக்கும் இரண்டு போட்டோக்களை ஷேர் செய்திருந்தார். அந்த படத்திற்கு மோதிர வடிவிலான எமோஜியை கேப்ஷனாக வைத்திருந்தார். 


Advertisement

தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ள செய்தியை எமோஜி மூலம் தெரிவித்த விஜய் ஷங்கருக்கு இந்திய அணி வீரர்கள் கே.எல் ராகுல், யுஸ்வேந்திர சாஹல், ஷ்ரேயஸ் அய்யர் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

image

ரசிகர்களும் விஜய் ஷங்கருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருவதால் வாழ்த்து மழையில் அவர் நனைந்துள்ளார்


Advertisement

அடுத்த சில நாட்களில் ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாட உள்ளார். அதற்காக விரைவில் அவர் ஐக்கிய அமீரகம் செல்ல உள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement