கேரளாவில் சிபிஎஸ்இ தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த கூலிதொழிலாளியின் மகனை பிரதமர் மோடி தொலைப்பேசிவாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மேரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் தங்கம் தம்பதியரின் மகன் வினாயக். தாய் தந்தை இருவரும் கூழித்தொழிலாளர்கள். வினாயக் அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் 12 ஆம் வகுப்பு வணிகவியல் பாடப்பிரிவில் பயின்று வந்தார். அண்மையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் அவர் 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் பட்டியலின மாணவர்களிடையே முதலிடம் பிடித்தார். மூன்று பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைக் கேள்விப்பட்ட இந்திய பிரதமர் மோடி வினாயக்கை தொலைப்பேசி வழியாகத்தொடர்பு கொண்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த உரையாடல் வானொலியிலும் ஒலிப்பரப்பப்பட்டது.
இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறும் போது “ பிரதமர் எங்களது மகனை அழைத்துப்பேசியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இவை அனைத்தும் கல்வியால் கிடைத்த பலன்” என்றனர். அவரது படிப்பிற்காக பல்வேறு கட்சியினர் உதவிதொகைகளையும், பரிசுகளையும் அளித்து வரும் நிலையில் பாஜக கட்சி சார்பில் வினாயக்கிற்கு 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டது.
Loading More post
காட்டு யானையுடன் செல்ஃபி: யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி