”அவரோட பங்கு ரொம்ப பெருசு” -ரெய்னா குறித்து ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஓய்வு முடிவு அறிவித்ததை யடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் பேசிய வீடியோவை பிசிசிஐ அதனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Advertisement

அண்மையில் இந்திய அணி வீரர்கள் எம்.எஸ். தோனி மற்றும் ரெய்னா அவர்களது இன்ஸாடாகிராம் பக்கத்தில் ஒரு நாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதற்கு திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் ரெய்னா குறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ அதனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது “ 2004,2005 யின் மத்திய பகுதியில் ரெய்னா 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மிக நன்றாக விளையாடினார். அப்போது இவர் இந்திய அணியின் மிக மிக முக்கியமான வீரராக இருப்பார் எனக் கருதினேன். கடந்த பாதி தலைமுறையாக இந்தியா அணி பல வெற்றிகளையும், நினைக்க்கூறத்தக்க நிகழ்வுகளையும் பெற்றுள்ளது. அதில் ரெய்னாவின் பங்கு அளப்பறியது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள், சாம்பியன் ஷிப் போட்டிகளில் அவரது பங்கு அபாரமாக இருந்தது.


Advertisement

அதே போல பீல்டிங்கிலும் ரெய்னா பங்கு அதிகம். களத்தில் அவரிடம் வெளிப்படும் ஆக்ரோஷம், கிரிக்கெட் மீதான ஆர்வம் உள்ளிட்டவை ரசிக்கத்தக்கவையாக இருந்துள்ளன. இந்திய அணியில் அவருக்கு கீழ் வரிசையில் பேட்டிங் வழங்கப்பட்டது. ஆனால் மேல் வரிசையில் வழங்கியிருக்கலாம். காரணம் சென்னை அணிக்காக அவர் மேல் வரிசையில் இறங்கி அபாரமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவர் உண்மையில் பயங்கரமான  கிரிக்கெட் வீரர் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement