"குஞ்சனுக்கு முன்பாக காஷ்மீருக்கு சென்றது நான் தான்" - குஞ்சன் சக்சேனாவின் தோழி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

"குஞ்சன் சக்சேனா" திரைப்படத்தின் கிளைமேக்ஸில் வருவதுபோல எந்த சாகசமும் நிகழவில்லை என்று நிஜ குஞ்சன் சக்சேனாவின் சக விமானி ஸ்ரீவித்யா ராஜன் தெரிவித்துள்ளார்.


Advertisement

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் பங்கேற்ற இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியான குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், குஞ்சன் சக்சேனா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

image


Advertisement

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இந்திய விமானப் படையினரை தவறாக சித்தரித்துள்ளது என்றும், அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு இந்திய விமானப் படை கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், திரைப்படம் மற்றும் ட்ரெய்லரில் வரும் சில காட்சிகள் மற்றும் உரையாடல்கள், இந்திய விமானப்படையை தேவையற்ற முறையில் எதிர்மறையாக சித்தரிப்பது கண்டறியப்பட்டது. இந்திய விமானப்படை பாலின பேதம் காட்டுவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் நிஜ குஞ்சன் சக்சேனாவின் சக விமானி ஸ்ரீவித்யா ராஜன் கருத்து தெரிவித்துள்ளார் "படத்தில் காட்டுவதுபோல நாங்கள் ஒருபோதும் விமானப் படையில் தரைக்குறைவாக நடத்தப்படவில்லை. கார்கில் போரில் பெண் விமானியாக குஞ்சன் சக்சேனா ஒருவர் மட்டுமே இல்லை. இதுவே மிகப்பெரிய தவறு. நானும் குஞ்சனும் ஒன்றாகத்தான் உதம்பூர் விமானப் படைப்பிரிவுக்கு கார்கில் போரின்போது அனுப்பப்பட்டோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் குஞ்சனுக்கு முன்பாக காஷ்மீர் பகுதிக்கு ஆண் விமானிகளுடன் முதல்முறை சென்றது நான்தான். குஞ்சன் பின்புதான் எங்களுடன் இணைந்தார். குஞ்சன் என்னுடைய நல்ல தோழி. படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெறும் சாகசம் எல்லாம் நிஜத்தில் நடக்கவில்லை. படத்தில் நிறைய விஷயங்களை திரிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement