தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து தமிழக அரசின் உத்தரவின்பேரில் அதே ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மாவட்ட கலெக்டர் ‘சீல்’ வைத்து மூடினார்.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்றும் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Loading More post
அதிகரிக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை... எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு என கணிப்பு
சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ