ஜெயலலிதாவின் நிழல்…சசிகலாவின் பிறந்தநாள் இன்று…!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சசிகலா எந்த அரசு பதவியிலும், அரசியல் பதவியிலும் இருந்ததில்லை என்றபோதும் கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத பெயர் சசிகலா. ஜெயலலிதாவின் நிழலாக இருந்து, அவரின் மறைவிற்கு பிறகு இன்று பதவியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசை அமைத்துக்கொடுத்தவர் சசிகலா. இவரின் 66வது பிறந்தநாள் இன்று.


Advertisement

image

80 களின் இறுதியில் நடராஜன் மூலமாக ஜெயலலிதாவிற்கு அறிமுகமான சசிகலா, ஜெயலலிதாவின் இறுதி காலம் வரை அவரின் நிழலாக வலம் வந்தவர். பல்வேறு வழக்குகள், சிறைவாசம் என பல துயரிலும் ஜெயலலிதாவை விட்டு விலகாமல் நின்றவர் இவர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்று, முதல்வராகவும் முயற்சி செய்தார் சசிகலா. அந்த நேரத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம் தனியாக பிரிந்து சென்று இவருக்கு எதிராக செயல்பட்டார். அச்சமயத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த காரணத்தால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு, தற்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார் சசிகலா.


Advertisement

image

1991 இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலே எப்போதும் சர்ச்சைகளின் நாயகியாக இருப்பவர் இவர். இப்போதும்கூட சில மாதங்களுக்கு முன்பாக விடுதலையாகியிருக்கவேண்டிய சசிகலாவின் விடுதலையை பாஜகதான் தடுப்பதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு சசிகலாவின் விடுதலையை அவரின் ஆதரவாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர். இதற்கு காரணம் அவர் விரைவில் விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்புதான். ஆகஸ்டு 28 ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்ற தகவலையும் அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சசிகலாவின் பிறந்தநாளுக்கு அதிகளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, டிவிட்டரிலும் #HBDசின்னம்மா ஹேஷ்டேக்கை டிரண்டாக்கிவருகின்றனர் அமமுகவினர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement