“கொரோனா பாதித்த எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம்” - கே.எஸ்.அழகிரி

KS-Alagiri-said--MP-Vasanthakumar-under-treatment-with-Ventilator-support

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெறுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தற்போது வென்டிலேட்டர் மூலம் சுவாசித்து வருகிறார். அவர் விரைவில் மீண்டு வர வேண்டும்” என்றார். வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

image


Advertisement

தொடர்ந்து பேசிய அழகிரி, “எங்களுடைய முதல் தேர்தல் பரப்புரை திருப்பூர் மாவட்டத்தில் துவங்குகிறது. ஒவ்வொரு வாரமும் மூன்று சட்டமன்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அந்த தொகுதிகளில் வாக்குச்சாவடி கமிட்டிகளை அமைத்து தோழமை கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் பரப்புரையை துவங்க உள்ளோம். வருகின்ற 20 ஆம் தேதி தேர்தல் காங்கிரஸின் பரப்புரை தொடங்கவுள்ளது.

மதுரையை இரண்டாவது தலை நகரமாக மாற்றுவது சிறந்தது. அதற்கு அரசு முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் தென் தமிழகம் வளர்ச்சி அடையும். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. புதிய கல்விக்கொள்கை மேல்தர வர்க்கம், படித்தவர்கள், வசதியானவர்களுக்கு தான் வாய்ப்பை வழங்கும். கோடிக்கணக்கான ஏழைகளுக்கு, கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சி தராது. தனியார் கல்விக்கு இது ஊக்கம் அளிக்கும் . புதிய கல்விக்கொள்கை சம தர்மத்திற்கு எதிரானது” என்று கூறினார்.

தோனியின் இந்த சாதனையை எப்போதும் முறியடிக்க முடியாது : பந்தயம் கட்டும் காம்பீர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement