"நானும் பாதிக்கப்பட்டேன்; கொரோனாவை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம்" கர்நாடக முதல்வர் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு குணமடைந்தேன், அதனால் மக்கள் யாரும் வைரஸை கண்டு பயப்பட வேண்டாம் என்று கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


Advertisement

பெங்களூரில் நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தப் பின்பு உரையாற்றிய கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா "கொரோனாவால் மக்கள் மிகுந்து மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதை நான் அறிவேன். பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வேலை இழப்பு, வருமானம் இழப்பு என அரசுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சரியாக சில மாதங்கள் ஆகும். மீண்டும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும்" என்றார்.

image


Advertisement

மேலும் பேசிய அவர் "நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். இப்போது குணமடைந்து இருக்கிறேன். இந்நேரத்தில் மக்களுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த கொரோனா வைரஸை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை, கவலைப்பட வேண்டியதும் இல்லை. பொது முடக்கத்தால் இனியும் எந்தப் பலனும் இல்லை என்பதால் ஜூன் 1 முதல் மாநிலத்தில் பொது முடக்கம் நீக்கப்பட்டது" என்றார்.

image

தொடர்ந்து பேசிய எடியூரப்பா "பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஜூன் 1 முதல் பொது முடக்கம் நீக்கப்பட்டது. ஆனால் பொது மக்கள் அனைவரும் தனி மனித இடைவெளி, மாஸ்க் அணிவது, கைகளை கழுவவது ஆகியவற்றை பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement