தனது தந்தையின் உடல்நிலை நேற்றைவிட இன்று சீராக இருப்பதாக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் ”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது மகன் எஸ்பிபி சரண் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் " என்னுடைய தந்தை வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்றைவிட இன்று அவரது உடல்நிலை சீராக உள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு சில காலங்கள் ஆகும். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவரின் உடல்நலம் மெல்ல மெல்ல தேறி வருகிறது இதிலிருந்து அவர் மீண்டு வருவார் " என்றார்.
மேலும் " காலை முதல் பலர் எனக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டனர். அனைவருக்கும் தனித்தனியாக என்னால் பதில் கூற இயலாத ஒரு சூழல் .அதனால் வீடியோ வாயிலாக இதனை தெரிவித்துக் கொள்கிறேன் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் என் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!