வழக்கமாக நம் ஊர் பக்கங்களில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட், வாலிபால், புட்பால், ஹாக்கி, கிட்டி புள் மாதிரியான விளையாட்டை விளையாட்டு ஆர்வலர்கள் விளையாடுவதை பார்த்திருப்போம். புதுச்சேரி நகரில் உள்ள மைதானங்களில் மேற்கூறிய இந்த விளையாட்டோடு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் கைகளில் இரும்பு பந்துகளை வைத்து கொண்டு விளையாடுவதையும் பார்க்கலாம்.
அந்த விளையாட்டின் பெயர் 'பெத்தாங்’ (Game of Boules or Pétanque). பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலிஸ் லீ நோயிர் கடந்த 1907இல் இந்த விளையாட்டை வடிவமைத்துள்ளார்.
“பிரான்ஸில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம். இந்தியாவில் பாண்டிச்சேரி உட்பட சில மாநிலங்களில் மட்டும் தான் பெத்தாங் விளையாடப்பட்டு வருகிறது. பாண்டிச்சேரி பிரெஞ்சு காலனியா இருந்தது தான் பெத்தாங் இங்கு விளையாட முக்கிய காரணம்.
பிரான்ஸ் இராணுவத்தில் வேலை பார்த்த சில பேர் ஓய்வுக்காக பாண்டிச்சேரி வரும் போது பொழுது போக்குக்காக பெத்தாங் விளையாட ஆரம்பிச்சிருக்காங்க. அது அப்படியே இந்த மண்ணோட விளையாட்டா மாறியிருக்கு.
6 மீட்டர் அகலமும் 13 மீட்டர் நீளமும் கொண்ட மண் தரையில் (PITCH) இரும்பு குண்டுகளை உருட்டி விளையாட வேண்டும். இரு அணிகளாக பிரிந்து ஒரு அணிக்கு மூன்று பேர் என முதலில் டாஸ் போடுவோம். அதில் யார் வெல்கிறார்களோ அந்த அணியினர் ஒரு சிறிய வட்டம் போடுவார்கள். பின் கிஷ்ணி (Cochonnet) எனப்படும் மரபந்தை உருட்டி விட வேண்டும். அதன் பின் இரும்பு குண்டை ஒவ்வொருவராக உருட்டியோ அல்லது எறிந்தோ விளையாடுவோம்.
இதில் எந்த அணி கிஷ்ணிக்கு மிக அருகில் இரும்பு பந்தை நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு ஒரு புள்ளி. மொத்தமாக 13 புள்ளிகள் எடுகிற அணி வெற்றி பெறும்.
ஒவ்வொரு குண்டும் சுமார் 650 கிராமிலிருந்து 800 கிராம் வரை இருக்கும். இந்த குண்டுகள் அனைத்துமே பிரான்ஸில் உருவாக்கப்பட்டது.
அதிக எடையுள்ள குண்டுகளை கைகளில் சுமந்து, எரிந்தும் உருட்டியும், குணிந்தும் நிமிர்ந்தும், அங்கும் இங்கும் நடப்பதாலும், வேர்த்து விறுவிறுக்க நடப்பதாலும் உடலுக்கு முறையான உடற்பயிற்சியாகவும் இந்த விளையாட்டு உள்ளது” என சொல்கிறார் பெத்தாங் விளையாட்டு வீரர் டேனியல்.
தற்போது கொரோனா அச்சுறுத்தலினால் புதுச்சேரியில் குழுவாக விளையாடப்படும் பெத்தாங் விளையாட்டு விளையாடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்