கேரள விமான விபத்து: தப்பிப் பிழைத்த இரட்டைச் சிறுவர்கள்

twins-rescued-from-kerala--flight--crash--discharged-from-hospital

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளாவுக்கு வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பெரும் விபத்திற்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் சிக்கிய ஏழு வயதான ஜெய்ன் மற்றும் ஜெமில் குண்டோட் பரக்கல் என்ற அந்த இரட்டைச் சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளனர்.


Advertisement

இந்த இரட்டையர்களின் தாய் உயிர் பிழைத்துள்ளாரா என்று தெரியவில்லை. அந்தச் சிறுவர்கள் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவில் பெயர்களைச் சொல்லியிருந்தனர். அதை வைத்து அவர்களது குடும்பத்தை அடையாளம் காணும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. விபத்தில் இருந்து உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்ட இருவரும் பெருக்கே சுங்கம் என்ற ஊரில் உள்ள ரெட் கிரசன்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

image


Advertisement

"இருவருக்கும் காலில் லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களுடைய குடும்பத்தினர் யாருமில்லை. பிறகு அவர்களுடைய உறவினர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச்சென்றார்" என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சிறுவர்கள் உள்பட 50 இளம் வயதுள்ளவர்கள் போயிங் 737 விமானத்தில் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement