கன்னியாகுமரி: 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை அருகே காரவிளை அனந்தநாடார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.


Advertisement

இவருக்கு சொந்தமான மாடுகளை பகல் நேரத்தில் அந்த பகுதியில் உள்ள காலி நிலத்தில் கட்டி வைப்பது வழக்கம். சம்பவத்தன்று அங்கு கட்டப்பட்டிருந்த மாடுகளை அவிழ்க்க மாலையில் சிறுமி அங்கு சென்றார்.

அப்போது அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முருகேசன் (52) என்பவர் சிறுமியை அருகிலுள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது.


Advertisement

சுதாகரித்துக் கொண்டு தப்பி வந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.       

loading...

Advertisement

Advertisement

Advertisement