கடலூர் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த தங்க தாலிச் சங்கிலி.. உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடலூரில் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை மீட்டு, குறைவான நேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்க்கு குவியும் பாராட்டு.


Advertisement

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்திலுள்ள பைந்தமிழ் தெருவில் வசிப்பவர் காவல் உதவி ஆய்வாளர் ராஜா. இவரது மனைவி ராணி தனது வீட்டின் முன்பு சாலையில் கிடந்த 6 1/2 பவுன் தங்கத் தாலியை கண்டெடுத்து அதனை தனது கணவரான காவல் உதவி ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்.


Advertisement

உடனடியாக காவல் உதவி ஆய்வாளர், விருத்தாச்சலம் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என தங்க சங்கிலியை ஒப்படைத்தார். இச்செய்தியை அறிந்த பைந்தமிழ் நகரை சேர்ந்த பெரியசாமி என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு, தங்க தாலி தனது மனைவியுடையது என்றும், தனது மனைவி வீரமணி மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என கூறினார்.

image

போலீசார் விசாரணையில் தங்கச் சங்கிலி பெரியசாமியுடையது என்று தெரியவந்தது. பின்னர் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் 6 1/2 பவுன் தங்கச் சங்கிலியை பெரியசாமியிடம் ஒப்படைத்தார். விசாரணையில் விரைவாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாக்கு, காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்


Advertisement
loading...
Related Tags : கடலூர்Cuddalore

Advertisement

Advertisement

Advertisement