இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல், கடந்த புதன்கிழமை 22 மாவட்டங்களிலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 225 இடங்களில், கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தவிர்த்து 196 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 71% வாக்குகள் பதிவான நிலையில், 64 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று தொடங்கியது.
இறுதிகட்ட நிலவரப்படி பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. தெற்கு இலங்கை பகுதி மக்களின் அமோக ஆதரவால், ராஜபக்சவுக்கு 60% வாக்குகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, சஜித் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 23.3% வாக்குகளைப் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளது.
அதற்கடுத்தபடியாக ஜெஜெபி கட்சிக்கு 3.84% வாக்குகள் கிடைத்துள்ளன. 2.82% வாக்குகளுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு 4ஆம் இடம் பிடித்துள்ள நிலையில், 2.15% வாக்குகள் பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு 5ஆம் இடமே கிடைத்துள்ளது.
Loading More post
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை