அடுத்த 21 நாட்களில் அமெரிக்காவில்20 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள்: அதிர்ச்சி தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் வரும் 21 நாட்களில் மேலும் 20 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாவார்கள் என்று அமெரிக்காவின் நோய்க்கட்டுபாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

image

அமெரிக்காவில் இதுவரை 1,54,447 பேர் கொரோனோ பாதித்து உயிரிழந்துள்ளனர். வரும் ஆகஸ்டு 22 ஆம் தேதி வாக்கில் இந்த எண்ணிக்கை 1 இலட்சத்து 73 ஆயிரத்தை தாண்டும் என்று அந்நாட்டின்  நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

அலபாமா, நியூஜெர்ஸி, கெண்டகி, வாஷிங்டன் போன்ற மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இளைஞர்கள் மூலமாகவே நோய் தொற்று வேகமாக பரவுகிறது என்று அம்மையம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் கூட்டமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலமாகவே நோய்த்தொற்று வேகமாக பரவுகிறது என்றும் அம்மையம் கவலை தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement