கேரிபைகளுக்கு ரூ 48, ரூ 12 வசூலித்ததால் பிக்பஸார் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரு வாடிக்கையாளர்களிடம் கேரி பேக்குகளுக்காக தலா 48 மற்றும் 12 ரூபாய் வசூலித்ததற்காக, பிக்பஸார் நிறுவனத்துக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சண்டிகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்.


Advertisement

image

நேகா சர்மா என்பவர் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3ஆம் தேதி, சண்டிகர் எலாண்ட் மாலிலுள்ள பிக் பஸாரில் 9,881 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியுள்ளார். அவர் பில் கட்டும்போது இரண்டு பேப்பர் பைகளுக்கு 48 ரூபாய் கட்டணமாக பில்லில் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த தொகையை திரும்ப கேட்டும் காசாளர் தரமறுத்துவிட்டார். அதுபோல பிரீத்தி கலியா என்ற வாடிக்கையாளர் பொருட்கள் வாங்கியபோது அவர் வாங்கிய இரண்டு கேரி பைகளுக்கு தலா 12 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.


Advertisement

இவ்வழக்கில் வாதாடிய பிக்பஸார் “ கேரி பைகளுக்கான தொகை பில்லில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இது சட்டவிரோதம் இல்லை. அதுபோல கூடுதலாக வாங்கும் கேரி பைகளுக்கு கூடுதல் தொகை தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியது. ஆனால் பொருட்கள் வாங்கும்போது கூடுதல் சுமையாக கேரிபைகளுக்கான தொகையையும் வாடிக்கையாளர்கள் மீது திணிக்கக்கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும் கூடுதலாக வசூலித்த கேரிபேக்குகளுக்கான தொகை மற்றும் தலா 100 ரூபாய் புகார்தாரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், அத்துடன் வழக்கு செலவுகளுக்காக  புகார் தாரர்களுக்கும் தலா 1,100 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், வாடிக்கையாளர் சட்ட உதவி கணக்கில் மூன்று புகார்களுக்கும் தலா 5 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும் பிக் பஸார் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

loading...

Advertisement

Advertisement

Advertisement