கொரோனா பரிசோதனைக்கு கிராம மக்கள் ஒத்துழைக்க மறுப்பதாக புகார்; குமரி கலெக்டர் எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குமரி மாவட்டத்தில் கிராம மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க நேரிடும் என குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’குமரி மாவட்டத்தின் சில கிராமங்களைச் சேர்ந்தவர்கள், உதாரணமாக வாணியக்குடி கிராமத்தின் சில பகுதிகளில் வசிக்கும் சிலர் கொரோனா நோய்த்தொற்றின் விபரீதத்தை அறியாமல் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சளி பரிசோதனை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று என்பது மிக வேகமாக பரவுவதுடன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு தீவிரத்தன்மை வாய்ந்தது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். நோய்த்தொற்றின் விபரீதத்தை அறியாமல் அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதன் மூலம் இவர்கள் தாங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மற்றவர்களும் பாதிக்கப்பட காரணமாக அமைந்து விடுகிறார்கள். அதன் மூலம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார்கள். 


Advertisement

தொடர்ந்து இந்த நிலை தொடருமானால் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத கட்டுப்பாட்டுப் பகுதி அமைந்துள்ள அப்பகுதி முழுவதையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மாவட்டத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது.

எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement