டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறப் போகிறாரா ரோஜர் பெடரர் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறும் காலம் நெருங்கிவிட்டதாக சுவிடட்ஸர்லாந்து நாட்டு ஜாம்பவான் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Advertisement

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். முன்னாள் நம்பர் ஒன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் மகுடமும் அடங்கும். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர்.

image


Advertisement

இந்நிலையில் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியொன்றில் ரோஜர் பெடரர் "எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் இறுதிக் கட்டத்தில் இருப்பதை உணர்கிறேன். அடுத்த 2 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறேன். ஆனால் இப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். எப்போது தளர்வடைகிறேனோ அப்போது விளையாடுவதை நிறுத்தி விடுவேன். டென்னிசை பொறுத்தவரை வயதானாலும் நிச்சயம் விளையாட முடியும். ஆனால் தொடர்ந்து கடின பயிற்சியில் ஈடுபட முடியாது" என்றார்.

image

மேலும் தொடர்ந்த அவர் " ஒலிம்பிக் போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி டோக்கியோவில் நடக்கும் என்று நம்புகிறேன். இதில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ளேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவு எதுவாக இருந்தாலும் தயாராகவே இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement