கை, கால் செயலிழந்து அவதிப்பட்ட தாய் : துயரம் தாங்காமல் கொன்ற மகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஞ்சிபுரத்தில் கை, கால் செயலிழந்து தாய் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரை அடுத்த கீவலூர் பகுதியில் வசிப்பவர் துரை (60). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (58) மற்றும் மகன் ஆனந்தன். ஆனந்தன் (33) அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

image


Advertisement

கோவிந்தம்மாள் கடந்த சில ஆண்டுகளாகவே கை, கால் செயல் இழந்து அவதிப்பட்டு வந்துள்ளார். தாய் மீது அதிக பாசம் கொண்டிருந்த ஆனந்தன், தாயை தொடர்ச்சியாக கவனித்து வந்துள்ளார். இதனால் ஆனந்தனக்கும், அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் ஆனந்தனின் மனைவி அவருடைய தாய் வீட்டிற்கு சென்றதால், ஆனந்தன் மனஉளைச்சல் அடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தாய் அவதிப்படுவதைக் கண்டு தினமும் மனம் நொந்துள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த அவர், தினம் அவதிப்படும் தனது தாயை தானே கொன்றுவிடலாம் என நினைத்துள்ளார்.

image


Advertisement

இந்நிலையில் தந்தை துரை கடந்த 26ஆம் தேதி இரவு வெளியில் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த கோவிந்தம்மாளின் கழுத்தை அறுத்து ஆனந்தன் கொலை செய்தார். கோவிந்தமாளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

”வாக்கிங் செல்லும் பெண்களே டார்கெட்” : குறிவைத்து கொள்ளையடித்த கும்பல் கைது

loading...

Advertisement

Advertisement

Advertisement