மெர்சலாக்கிய ’கர்ணன்’ பட மேக்கிங் வீடியோ ! கம்பீரமான நாதஸ்வர இசை !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் தனூஷ் பிறந்த நாளையொட்டி ‘கர்ணன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார், அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ்.


Advertisement

இன்று நடிகர் தனூஷின் 37 வது பிறந்தநாள், அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ’பரியேறும் பெருமாள்’ பட வெற்றி, மாரி செல்வராஜிற்கு நடிகர் தனூஷை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. இருவரும் இணைந்தது மட்டுமல்ல, ’கர்ணன்’ என்ற தலைப்பும் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைத்தது. இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான, மகாபாரதத்தில் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக கர்ணன் தொடுக்கும் கேள்விக் கணைகளே அர்ஜுனனின் அம்பு வலிமையைவிட ஆயிரம் மடங்கு உறுதியானது.

image


Advertisement

 

    இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்த சூழலில்தான், இன்று காலையில் கர்ணன் பட டைட்டில் போஸ்டரும், தற்போது மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில், நடிகர் தனூஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். அதோடு, திருநெல்வேலியின் அந்தகால வீடுகளையும் ஷூட்டிங்கிற்காக வடிமைக்கும் காட்சிகளும் இடம்பெற்று வரவேற்பை பெற்றிருக்கின்றன.

image


Advertisement

இதுகுறித்து, தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் “இராமநாதபுரம் ஜில்லா ’நாதஸ்வர சக்கரவர்த்தி’ திரு மருங்கன் அய்யாவின் கம்பீரமான இசையில் கம்பீரமான ராஜ மேலத்ஹ்டோடு இணைந்து சந்தோஷ் நாராயணன் சார் தன் மந்திர நரம்புகளை மீட்டி உருவான கர்ணனின் வருகையும் தொடக்கமும்” என்று பதிவிட்டுள்ளார். கர்ணன் மேக்கிங் வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 1 லட்சம் பார்வையாளர்களையும் 22 ஆயிரம் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement