உள்ளூர் கால்பந்தாட்ட தொடரில் கெத்து காட்டிய ரொனால்டோ அணி - ஒன்பதாவது முறை சாம்பியன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இத்தாலியில் உள்ளூர் கால்பந்தட்ட கிளப் அணிகளுக்கு இடையிலான சீரி ஏ (2019-20) கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நம் ஊர் ஐ.பி.எல் தொடர் போலச் சீரி ஏ தொடர் இத்தாலியில் மிகவும் பிரபலம். 


Advertisement

image

சுமார் இருபது அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு இரண்டு முறை மோத வேண்டும். அதில் அதிக புள்ளிகளை பெறுகின்ற அணிக்கு கோப்பை கொடுக்கப்படும். நடப்பு சீசனில் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான ரொனால்டோ விளையாடும் ஜுவான்டஸ் அணி அதிகளவிலான புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது. 


Advertisement

image

இதுவரை இந்த சீசனில் ஜுவான்டஸ் அணி 36 போட்டிகளை விளையாடியுள்ளது. அதில் 26 வெற்றிகளை பதிவு செய்து  பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ச்சியாக ஒன்பது முறை சீரி ஏ பட்டத்தை ஜுவான்டஸ் அணி வென்றுள்ளது. 

இந்த சீசனில் ஜுவான்டஸ் அணிக்காக 32 போட்டிகள் விளையாடியுள்ள ரொனால்டோ 31 கோல்களை அடித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement