55 ஆயிரம் பாம்புகளைப் பிடிச்சிருக்காரா? சத்தீஸ்கர் காவலரின் ஆபத்தான சேவை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாம்புகளின் நண்பராக மக்களால் அறியப்படும் சத்தீஸ்கர் மாநில காவலர் தேவேந்திர தாஸின் சேவையால் பலர் உயிர் பிழைத்துள்ளனர். இதுவரை அவர் 55 ஆயிரம் பாம்புகளைப் பிடித்திருக்கிறார்.


Advertisement

பெரும்பாலான பாம்புகள் அதிக விஷமுள்ளவை. ஆபத்து நிறைந்தவை என்று தெரிந்தாலும் அந்தக் காவலர் பாம்புகளிடம் நெருங்கிப் பழகக்கூடியவராக இருக்கிறார். பஸ்தார் மாவட்டத்தில் காவலராகப் பணிபுரியும் தேவேந்திரதாஸ், இங்குள்ள மக்களால் பாம்புகளின் நண்பர் என்று  அழைக்கப்படுகிறார். சில நேரங்களில் மிக ஆபத்தான விஷப்பாம்புகளிடம் கைகளை அசைத்து விளையாட்டுக் காட்டுவதும் உண்டு. 

பாம்புகளைப் பயமின்றி பிடிப்பதால், பலருடைய உயிரைக் காப்பாற்றியுள்ள இந்தக் காவலர், தன் பத்து வயதில் இருந்து பாம்புகளைப் பிடித்துவருகிறார். தன் தந்தையிடம் இருந்து பாம்புப் பிடிக்கும் நுட்பத்தைக் கற்ற தேவேந்திர தாஸின் குடும்பம் மூன்று தலைமுறையாக அதில் ஈடுபட்டுள்ளனர். பாம்புகளின் நண்பர்தான். ஆனால் கடிக்காமல் இருக்குமா?.. இதுவரையில் 25, 30 முறை நண்பர்களிடம் கடிபட்டிருக்கிறார் தேவேந்திர தாஸ்.      


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement