அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்துதான் போல. இன்று யாரைப்பார்த்தாலும் மாஸ்க்கோடுதான் வலம் வருகின்றனர். கொரோனோ தடுப்பு பணிகளில் முதன்மையானது முகக்கவசம்தான். ஆனால் இப்போது முகக்கவசம் குறித்து பல மாற்றுக்கருத்துகளும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.
கூட்டத்தில் செல்லும் போதும், பணியிடத்திற்கு செல்லும் போதும் , புதிய மனிதர்களை சந்திக்கும்போதும் நிச்சயமாக முகக்கவசம் அவசியமானதுதான். ஆனால் இப்போது பலர் தனிமையில் வாக்கிங் போகும்போது, வீடுகளில் இருக்கும்போதுகூட மாஸ்க் அணிவதைப்பார்க்க முடிகிறது. இது அவசியமற்றது என்று தொடர்ந்து மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“பொதுவாக நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் அல்லது சுவாசக்கோளாறு உள்ளவர்கள் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதன் மூலம் மூச்சு திணறல் பிரச்சினைகள் ஏற்படலாம். சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது 99 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜன் நமக்கு கிடைக்கும். முகக்கவசம் அணியும்போது அது 95 சதவீதமாக குறையும். நுரையீரல் தொடர்பான நோய்கள் இல்லாதவர்கள் முகக்கவசம் அணியும்போது இந்த அளவுக்கு ஆக்சிஜன் கிடைத்து கொண்டே இருக்கும். அதே நேரத்தில் நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆக்சிஜனின் அளவு மேலும் குறையும். பொதுவாக 92 சதவீதம் அளவுக்கு குறைவாக ஆக்சிஜன் கிடைக்கும்போதுதான் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மேலும் முகக்கவசங்கள் என்ற பெயரில் இப்போது மிக இறுக்கமாக நாசியை அழுத்தும் மாஸ்க்குகள், சுவாசிக்கவே முடியாத வகையிலான முகக்கவசங்கள் என ஆபத்தானவற்றை பலர் பயன்படுத்துகின்றனர், இதனை தவிர்த்து பாதுகாப்பான மாஸ்க்கினை பயன்படுத்தவேண்டும்” என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
அதுபோல முதியவர்கள் நீண்டநேரம் முகக்கவசம் அணியும்போது, அவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். எனவேதான் வயதானவர்கள் வீட்டிலே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நுரையீரல் மற்றும் சுவாசநோய் பிரச்சினை இருப்பவர்கள் தேவையான இடத்தில் மட்டும் முகக்கவசம் அணியலாம்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?