[X] Close >

‘கொரோனா ஜலதோஷம் மாதிரிதான் வந்து போச்சு’ கொரோனாவில் இருந்து மீண்ட 100 வயது மூதாட்டி !

Covid-19-is-like-common-cold-said-100-year-old-woman-who-recovered-from-coronavirus

கர்நாடக மாநிலம்,  பெல்லாரி மாவட்டம் ஹுவினஹடகலியைச் சேர்ந்தவர் 100 வயதான ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16-ஆம் தேதி  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் அந்த மூதாட்டி கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். 


Advertisement

கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து மூதாட்டி ஹல்லம்மா கூறும்போது, “மருத்துவர்கள் எனக்கு நன்றாக சிகிச்சை அளித்தனர். வழக்கமான உணவுகளோடு, ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன். மருத்துவர்கள் எனக்கு மாத்திரைகள் மற்றும் ஊசி போட்டார்கள். நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.  கொரோனா ஒரு ஜலதோஷம் போன்றுதான் இருந்தது” என்றார்.

முன்னதாக வங்கியில் பணிபுரிந்து வரும் மூதாட்டியின் மகனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து மூதாட்டி, மருமகள், பேரன் என அடுத்தடுத்து வீட்டில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ,அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஹல்லம்மா என்கிற 100 வயது மூதாட்டி தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close