இரவில் அரைகுறை ஆடையில் ஆயுதங்களுடன் வலம் வரும் கொள்ளையர்கள் - அச்சத்தில் மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் குடியிருப்பு பகுதியில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image

கோவை இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சட்டையின்றி கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் உலா வந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.


Advertisement

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே நாள் பீளமேடு வார்டு 38 க்கு உட்பட்ட பாலகுரு கார்டன் பகுதியிலும் இதேபோல் 3 பேர் முகத்தில் துணிகளை அணிந்து கொண்டும், அரைகுறை ஆடையுடன் சுற்றும் வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

image
இது மட்டுமன்றி பீளமேடு பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து பொருட்களை திருடவும் முயற்சி நடந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் இதேபோல், சிங்காநல்லூர் பகுதியில் குழுவாக ஆயுதங்களுடன் பலர் சுற்றித்திருந்ததும், அந்த அடையாளம் தெரியாத நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற சி.சி.டி.வி காட்சிகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement