எதிர்பாராதவிதமாக லாக் ஆன கார்...! 2 சிறுமிகளுக்கு நேர்ந்த பரிதாபம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கள்ளக்குறிச்சி அருகே காரில் சிக்கி மூச்சுத் திணறி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் உள்ள பாரதியார் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவருக்கு சொந்தமான மாருதி ஷிப்ட் கார் ஒன்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

image


Advertisement

இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த அய்யனார் மகள் வனிதா(3) ஏழுமலை என்பவரது மகள் ராஜேஸ்வரி (7) ஆகிய இருவரும் காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் லாக் ஆனதால் சிறுமிகள் இருவரும் வெளியே வர முடியாமல் காரிலேயே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தவித்துள்ளனர். இதனால் மூச்சுத் திணறி சிறுமிகள் இருவரும் காரிலேயே உயிரிழந்துள்ளனர்.

image

இதனை எதேர்ச்சியாகக் கண்ட அக்கம்பக்கத்தினர் காரை உடைத்து குழந்தைகளை வெளியே எடுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மணலூர்பேட்டை காவல்துறையினர் காரை பறிமுதல் செய்து கார் உரிமையாளர் ராஜாவின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement