Advertisement

மந்திரவாதி பேச்சைக் கேட்டு 5 குழந்தைகளைக் கொன்ற தந்தை - ஹரியானாவில் அதிர்ச்சி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹரியானா மாநிலம் ஜிந்த் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜும்மா. கடந்த ஜூலை 15ஆம் தேதி அவரின் இரண்டு மகள்கள் காணாமல் போனதாக தனது மனைவியுடன் சென்று போலீஸில் புகார் அளித்துள்ளார் அவர். ஜூலை 20ஆம் தேதி, இரண்டு சிறுமிகளின் உடல்கள் ஹன்சி - புட்டானா கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.


Advertisement

இதுபற்றி பஞ்சாயத்தில் கூட்டம் கூட்டி விசாரித்தபோது தந்தையே தனது 5 குழந்தைகளையும் கடந்த 5 வருடத்தில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

image


Advertisement

தனது குழந்தைகளைக் கொன்றுவிட்டால் வீட்டில் வறுமை தீர்ந்துவிடும் என 5 வருடங்களுக்கு முன்பு ஒரு மந்திரவாதி சொன்னதாக அதிர்ச்சி அடைய வைத்தார். மந்திரவாதியின் பேச்சை நம்பி முதலில் தனது மூத்த மகனை கொலை செய்துள்ளார். அடுத்து ஒரு மகன், மகளை கொலை செய்திருக்கிறார். அதை யாரும் கண்டுபிடிக்காததால் இப்போது கடைசியாக இருந்த தனது மகள்கள் இருவரையும் அவர் தாமே கால்வாயில் மூழ்கவைத்துக் கொன்றதாகவும் ஒத்துக்கொண்டார்.

இதைக் கேட்ட பஞ்சாயத்து தலைவர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தார். தனது 5 குழந்தைகளைக் கொன்றதற்காக அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Tags : haryana man killed 5 children
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement