Advertisement

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு- தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் வன அலுவலகத்தில் உயிரிழப்பு போலீஸ் விசாரணை.
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் வன அலுவலகத்தில் உயிரிழப்பு. வனத்துறையினர் தாக்கியதால் முதியவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு.


Advertisement

image

image 1


Advertisement

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரைமுத்து. 76 வயதான இவர் தனது வீட்டின் பின் பகுதியில் உள்ள சுமார் 2½ ஏக்கரில் விவசாயம் செய்துவருகிறார். இரவு நேரங்களில் தோட்டத்திற்கு வரும் காட்டுபன்றிகள் விளைநிலத்தை சேதப்படுத்துவதால் தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடையம் வனசரக அதிகாரிக்கு புகார் வந்த நிலையில், அணைக்கரை முத்துவை விசாரணைக்காக, கடையம் வனசரக அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில் நேற்று மாலை வன அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்ததோடு, மின்வேலி அமைத்தது தவறு எனவும் தானே ஒப்புக்கொண்டு அதற்கான அபராதத்தையும் கட்டுவதாகவும் தெரிவித்ததாக தெரிகிறது.

              image


Advertisement

image 2

இந்த நிலையில் உடல்நிலை ஏதோ மாற்றம் இருப்பதாகவும் நெஞ்சுவலிப்பதாகவும் வனதுறை அதிகாரிகளிடம் அணைக்கரை முத்து தெரிவித்துள்ளார். உடனடியாக வனத்துறை ஜீப் மூலம் கடையம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அனணக்கரைமுத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவரும் நிலையில்
விசாரணைக்காக ஆஜரான அணைக்கரை முத்துவை வனத்துறை அதிகாரிகள் தாக்கியதில் தான் உயிரிழந்தாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

வனதுறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் அருகே அமர்ந்து நீண்ட நேரம் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அணைக்கரை முத்துவின் மகன் நடராஜன் அளித்த புகாரின் பேரில் 176 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது குறித்து மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில் உடற்கூறாய்வில் ஒரு நீதிபதி பங்கேற்பார் எனவும் கூறப்பட்டு அணைக்கரை முத்துவின் உடல் நெல்லை அரசு மருத்துவமணையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பபட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement