இன்று தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: கடைகளில் நேற்றே குவிந்த மக்கள்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகத்தின் பல இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


Advertisement

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஜீலை 31 ஆம் தேதி சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

image


Advertisement

இதனால் நேற்று மதுக் கடைகளிலும், இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.  மதுக்கடைகளில் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க மூங்கில் கம்புகள் அமைக்கப்பட்ட போதும், மதுக் குடிப்போர் இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமாலும் முட்டி மோதிக் கோண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர். அதேபோல் மீன்மார்க்கெட்டுகள், இறைச்சிக் கடைகள், காய்கறிக்கடைகள் என பல இடங்களிலிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement