வந்தாச்சு ஆன்டிபாடி டெஸ்ட் ; இனி 15 நிமிடத்தில் பரிசோதனை முடிவு! மருத்துவரின் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிய இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் வழிக்காட்டுதலின்படி ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவில் உள்ளது என கண்டறியும் ஆன்டிபாடி டெஸ்ட் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது தமிழக அரசு.


Advertisement

முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முதல்நிலை பணியாளர்களுக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கும் ஆன்டிபாடி டெஸ்ட் மேற்கொள்ளப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

ஆன்டிபாடி டெஸ்ட் குறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறும்போது, ‘’கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால் அந்த வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி நமது உடலில் உருவாகியிருக்கும். அந்த எதிர்ப்பு சக்திக் காரணியான ஆன்டிபாடிகளை அளவீடு செய்வது இந்த பரிசோதனையின் செயல்முறையாகும்


Advertisement

நமது உடலுக்குள் படை எடுக்கும் கொரோனா வைரஸ் ஒரு Antigen எனப்படும். நமது உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலம் ஒவ்வொரு ஆண்டிஜெனுக்கும் பிரத்யேகமான ஆன்டிபாடி எனும் எதிர்ப்பு திறன் பொருந்திய பொருளை உருவாக்கி அந்த எதிரியை அழிக்க முற்படும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஏழாவது நாளில் இருந்து IgM எனும் ஆன்டிபாடியை நமது எதிர்ப்பு சக்தி மண்டலம் உருவாக்கும். தொற்று ஏற்பட்டதில் இருந்து 14 வது நாளில் இருந்து IgG எனும் ஆன்டிபாடியை நமது எதிர்ப்பு சக்தி மண்டலம் உருவாக்கும்.

image


Advertisement

முதலில் 7வது நாள் தோன்றிய IgM ஆனது 21 நாட்கள் வரை ரத்தத்தில் இருக்கும் பிறகு மறைந்து விடும். 14வது நாள் தோன்றிய IgG சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை இருக்கும். இவை தான் தடுப்பு மண்டலத்தின் நினைவுத்திறன் சார்ந்த ஆன்டிபாடிகள். இந்த ஆன்டிபாடிகள் ரத்தத்தில் தேவையான அளவு இருக்கும் வரை அதே கிருமி மீண்டும் தொற்று ஏற்படுத்த முடியாது.

இப்போது கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதற்கு பார்க்கப்படும் பரிசோதனையின் பெயர் RT-PCR என்பதாகும். அதாவது மூக்கின் உள்பகுதியில் தொண்டை ஆரம்பமாகும் இடத்தில் இருந்து ஒரு தடவல் எடுத்து அதில் இருக்கும் வைரஸை பல்கிப்பெருகச்செய்து கண்டறிந்து கூறும் பரிசோதனை. இதுவே கொரோனாவுக்கான முழுமுதல் பரிசோதனையாக முன்மொழியப்பட்டிருக்கிறது.

ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்து 28 நாட்கள் வரை இந்த வைரஸின் மூலபொருளான ஆர்.என்.ஏ.வை காண இயலும். கண்டறிய இயலும். கொரோனா RT-PCR  பாசிடிவ் ஆன ஒரு நபர் அவர் முழுவதும் குணமான பின்பும் கூட 21 நாள் கழித்து பார்த்தாலும் RT-PCR பாசிடிவ் என்று வரலாம்.

இந்த காரணத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்யும் போது RT-PCR  தேவையில்லை எனும் முறை பயன்பாட்டுக்கு வந்தது. அவருக்கு பாசிடிவ் என்று வந்தாலும் 21நாட்களுக்கு மேல் அவர் தொற்றை பரப்பும் வாய்ப்பு இல்லை.

சரி இந்த ஆன்டிபாடிகளை பரிசோதனை செய்வது எப்படி பலன் தரும்?

இன்று ஒருவருக்கு இந்த ஆன்டிபாடிகள் பரிசோதனை செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு IgG பாசிடிவாக வருகிறது என்றால் என்ன அர்த்தம்? அவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து குணமாகி கட்டாயம் 14 நாட்கள் தாண்டி விட்டன என்று அர்த்தம்.

இவர் ப்ளாஸ்மா சிகிச்சைக்கு தனது ரத்தத்தை கொடையாக வழங்கலாம். Total antibody என்ற பரிசோதனையில் இதுவரை இவரது ரத்தத்தில் IgM IgG ஆகிய எந்த ஆண்ட்டிபாடி தோன்றியிருந்தாலும் பாசிடிவ் என்று வரும்.

Total antibody பாசிடிவ் என்று வந்து IgG நெகடிவாக வந்தால் அவருக்குள் கொரோனா வைரஸ் நுழைந்து இன்னும் 14 நாட்கள் ஆகவில்லை என்று பொருள். அவரை அடுத்த இரண்டு வாரம் தனிமைப்படுத்த வேண்டும். அறிகுறிகள் இருந்தால் அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை எடுக்க வேண்டும். RT-PCR செய்து வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Total antibody நெகடிவாக வந்தால் அவருக்கு இன்னும் தொற்று ஏற்படவே இல்லை என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான IgM ஆண்ட்டிபாடி உருவாக ஏழு நாட்கள் ஆகும். இதை Window period என்று அழைக்கிறோம்

தொற்று ஏற்பட்ட முதல் ஏழு நாட்களுக்குள் இந்த ஆண்ட்பாடி பரிசோதனைகளை செய்தால் நெகடிவ் என்று தான் ரிசல்ட் வரும். ஆனால் RT-PCR பரிசோதனை தொற்று ஏற்பட்டதில் இருந்து இரண்டாவது நாளில் இருந்து பாசிடிவ் என்று தெரிய ஆரம்பிக்கும். எனவே ஆண்ட்டிபாடி நெகடிவ் என்று வந்தாலும் அவர் தொற்றின் முதல் ஏழு நாட்களுக்குள் இருக்கலாம். பாசிடிவ் என்று வந்தால் அவருக்கு தொற்று ஏற்பட்டு எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாக பொருள்.

என்னிடம் பரிசோதனை முடிவு அனுப்பிய ஒரு நண்பருக்கு கொரோனா IgG மற்றும் Total antibody இரண்டும் நெகடிவ் என்று வந்தது.
எனவே இவருக்கு இன்னும் தொற்று ஏற்படவே இல்லை என்றும் கொள்ளலாம். அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டு ஏழு நாட்களுக்குள் இந்த பரிசோதனையை எடுத்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்.

இதில் நெகடிவ் என்று வந்திருந்தும் அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் RT-PCR செய்து இறுதி முடிவு தெரிந்து கொள்ளலாம்.

இதில் மற்றுமொரு ட்விஸ்ட் இருக்கிறது. 100 பரிசோதனைகளில் 37 பரிசோதனைகள் RT-PCR கூட பாசிடிவாக இருக்கும். ரிசல்ட்டை நெகடிவாக கூறிவிடும் வாய்ப்பு உண்டு. RT-PCR பரிசோதனைக்கு specificity அதிகம். அதனால் அது பாசிடிவ் என்று கூறினால் அது பாசிடிவாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதேசமயம் நெகடிவ் என்று கூறினால் அதை மட்டும் நம்பி விடமுடியாது.

இரண்டு முடிவுகள் RT-PCR நெகடிவாக வந்தும் CT scan எனும் நெஞ்சுப்பகுதி திறன்மிக்க ஊடுகதிர் பரிசோதனை மூலம் நுரையீரலில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நோய் தொற்றாளர்களை நான் அறிவேன். இவை எல்லாம் பரிசோதனைகளில் இயற்கையாகவே இருக்கும் சாதக பாதகங்கள் ஆகும்.

இவற்றை மருத்துவர்கள் தெளிவாக அறிந்து சமயத்துக்கு ஏற்றாற் போல் நோயாளியின் அறிகுறிகளைப் பொறுத்து முடிவெடுத்து சிகிச்சை அளித்து வருகிறோம்.’’ என்கிறார் அவர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement