‘நம்பிக்கையில்லனா இந்த ரிப்போர்ட்ட பாருங்க’ கொரோனாவுடன் விமானத்தில் பயணித்த நபர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா தொற்று உறுதியான ஒருவர் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானத்தில் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

தலைநகர் டெல்லியின் வடக்கு 24 பர்கானாஸில் வசிக்கும் அந்த நபர் கடந்த 14ம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமானம் வழியாக டெல்லியிலிருந்து தனது சொந்த மாநிலத்தை அடைந்தார். கொல்கத்தா செல்லும் விமானசேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கவுகாத்தி சென்று அங்கிருந்து மாலை 5 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தார்.

image


Advertisement

அங்கு வந்த அவர் தனக்கு இருமல் இருப்பதாகவும் தன்னை தனிமைப்படுத்தும் படியும் விமான அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். உடலின் வெப்பநிலையை பரிசோதித்த அவர்கள், அவரை தனிமைப்படுத்த மறுத்துவிட்டனர். அவர் ஏற்கனவே தன்னிடம் இருந்த கொரோனா தொற்று உறுதியான ரிப்போர்ட்டை காட்டியுள்ளார்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள் அவரை உடனடியான ராஜர்ஹட்டில் இருக்கும் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் தனிமைப்படுத்தினர்.அந்த நபருடன் இரண்டு விமானங்களிலும் பயணித்தவர்களைக் கண்டறிந்து சோதனை செய்ய தீவிர முயற்சிகள் நடந்துவருகிறது.

image


Advertisement

முழு ஊரடங்கிற்கு பிறகு முதல்கட்ட விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி மற்றும் கவுகாத்தி விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் எப்படி பரிசோதனையிலிருந்து தப்பித்திருக்க முடியும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement