12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு : 92.3% பேர் தேர்ச்சி

Class-12-Exam-Results-Published-on-the-Internet

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 


Advertisement

image

மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மார்ச்/ ஜூன் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை 2020 பருவத்தில் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படும் என்றும் இது குறித்தான விவரங்கள் மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என அரசு கூறியிருந்தது. அதன்படி தற்போது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 94.8 சதவீதத்தினரும்,  மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 95.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் 95.82 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் 96.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணித பாடப்பிரிவில் 96.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 93.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியல் பாடப் பிரிவில் 92.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடப்பிரிவில் 99.51 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.94 சதவீதமாக உள்ளது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் அறியலாம்.

 


Advertisement

 

 

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement