சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 76 ஆக அதிகரிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து இருந்து குணமடைந்தோர் சதவிகிதம் 76 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

சென்னையில் மொத்தம் 77 ஆயிரத்து 338 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 58 ஆயிரத்து 615 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். 1,253 பேர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்து 469 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 497 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

image


Advertisement

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி:  காங்கிரஸ் பிரமுகர்களின் இடங்களில் ஐடி சோதனை! 

அண்ணாநகர் மண்டலத்தில் 1,849 பேரும், தேனாம்பேட்டையில் 1,651 பேரும் சிகிச்சையில் உள்ளனர். அடையாறு., தண்டையார்பேட்டை , ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் ஆயிரத்தை கடந்தவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

எட்டு மண்டலங்களில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையில் இருக்கிறார்கள். சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 23 சதவிகிதமாக உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement