மேற்குவங்கம்: பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு; கொலை என குற்றச்சாட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேற்குவங்கத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ, மார்க்கெட் பகுதி அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Advertisement

மேற்குவங்கத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத். இவர் தனது வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள கடை அருகில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்த எம்எல்ஏவின் குடும்பத்தினர் கூறும்போது, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சில நபர்கள் வீட்டிற்கு வந்த எம்எல்ஏவை அழைத்துச் சென்றுதாக கூறியுள்ளனர்.


Advertisement

இதனிடையே எம்எல்ஏ தேபேந்திர நாத் தற்கொலை செய்யவில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா 'நெகட்டிவ்' 

loading...

Advertisement

Advertisement

Advertisement