முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கை காவல் துறையினர் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடுமாறு தொடரப்பட்ட வழக்கில் நாளை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட உள்ளது.
ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22-ஆம் தேதி செல்வவினாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முறையிட்டார். அதில் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
செல்வவினாயகத்தின் இந்த புகாரை காவல் துறையினர் ஏற்காததை அடுத்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அதில் தனது புகாரை பதிவு செய்து விசாரணை செய்ய தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிடுமாறு கோரினார். நீதிபதி மேகலா முன்பு வழக்கு விசாணைக்கு வந்தது. இது போன்று பலர் வழக்கு தொடர முயல்வதாகவும், இவை தேவையற்ற குழப்பத்தை உண்டாக்கும் என்பதால் வழக்கை பதிவு செய்யவில்லை என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
யாரொருவர் வழக்கு தொடுத்தாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் வழக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மேகலா நாளை இவ்வழக்கு தொடர்பாக உத்தரவிடப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
Loading More post
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!