ஊரடங்கு காலத்திலும் சென்னையில் இளைஞர்கள் பைக்ரேஸ் - வீடியோ!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் ஊரடங்கு காலத்திலும் இளைஞர்கள் பைக்ரேஸில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சென்னையில் அவ்வப்போது பைக் ரேஸ் நடப்பதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போலீசார் தடுப்புகள் அமைத்து பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை கைது செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்வர். இந்நிலையில் தற்போது கொரோனாவுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நேரத்திலும் சென்னையில் பைக் ரேஸ் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image


Advertisement

சென்னை காவல்துறையினர் கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியில் வந்ததற்காக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் ஒப்படைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இந்நேரத்திலும் சென்னை பெரம்பூர், ஜமாலியா பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து, முரசொலி மாறன் மேம்பாலத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

image


Advertisement

இதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், இரவு நேரத்தில் கனரக வாகனத்தை தவிர மற்ற வாகனங்கள் மேம்பாலத்தில் வருவதை தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement