JUST IN

Advertisement

ஜூலை இறுதியில் இந்தியா வரும் 6 ரஃபேல் போர் விமானங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவுடனான எல்லைப் பிரச்னை, கொரோனா பாதிப்புகள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஜூலை மாதம் இறுதியில் 6 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Advertisement

சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், முதல் நான்கு ரஃபேல் போர் விமானங்கள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இந்த விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மே மாதம் தான் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

image


Advertisement

இந்நிலையில் பிரான்சில் தயாரிக்கப்பட்ட 6 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை மாதம் இறுதியில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 6 போர் விமானங்களையும் இந்திய விமானப் படை விமானிகளே பிரான்ஸில் இருந்து இயக்கி இந்தியா கொண்டு வருவார்கள் என்று "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஹாரியானா மாநிலம் அம்பாலா விமானதளத்தில் ஜூலை 27 ஆம் தேதி ரஃபேல் போர் விமானங்கள் வந்தடையும் என கூறப்படுகிறது.

முதல்கட்டமாக 4 விமானங்களே வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இனங்க ரஃபேல் விமான தயாரிப்பு வேலைகளை பிரான்ஸ் துரிதப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பிரச்னை இல்லையென்றால் கடந்த மாதமே ரஃபேல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரான்ஸில் இருந்து புறப்படும் 6 ரஃபேல் போர் விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபி நகரின் அல் தஃப்ரா விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டு, பின்பு இந்தியா புறப்படும்.

image


Advertisement

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள விமானப் படை அதிகாரி ஒருவர் "இந்திய - சீன எல்லையில் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்படுமா என்று இப்போது சொல்ல முடியாது. ரஃபேல் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளும் விமானிகளுக்கு பிரான்ஸில் அளிக்கப்பட்டுவிட்டது. விமானங்கள் இந்தியாவுக்கு வந்ததும் விரைவிலேயே எத்தகைய சூழலையும் சந்திக்க ரஃபேல் தயாராக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்படும்" என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement