கொரோனாவைக் கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்திப் பெட்டகம் - மதுரை மாநகராட்சி அசத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மாநகராட்சியின் நோய் எதிர்ப்பு மருந்து சக்தி பெட்டகத்தை மக்களும், தொழில் நிறுவனங்களும் அதிகளவில் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.


Advertisement

image

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது. கொரோனாவைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி மூலம் 1400 களப்பணியாளர்களை கொண்ட காய்ச்சல் கண்டறியும் குழு, வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்குவது, ஜிங்க் மற்றும் ஆல்சனிகா ஆல்பம் போன்ற சத்துமாத்திரைகளை வழங்கி வருகிறது.


Advertisement

imageimage

குறிப்பாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் நோய் எதிர்ப்பு மருந்து சக்தி பெட்டகம் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பெட்டகத்தில் ஆடாதொடா மணப்பாகு, தாளிசாதி மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி, ஜிங்க் மாத்திரைகள், மல்டி விட்டமின் மாத்திரைகள், ஆல்சனிகா ஆல்பம் உள்ளிட்ட மருந்துபொருட்கள் இடம் பெற்றுள்ளன. அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் விளக்கமும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை காவலர்கள், உணவகங்கள் உள்ளிட்ட பலரும் வாங்கிச் செல்கின்றனர்.

இந்தப் பெட்டகம் குடிசை வாழ் மக்களுக்கு இலவசமாகவும், பிறருக்கு 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


Advertisement


இப்பெட்கத்தில் உள்ள பொருட்களின் அளவு:

ஆடாதொடா மணப்பாகு-100மிகி.

தாளிசாதி மாத்திரைகள்-50


கபசுர குடிநீர் பொடி- 50கி.


ஜிங்க் மாத்திரைகள்- 10.


மல்டி விட்டமின் மாத்திரைகள்-10.


ஆல்சனிகா ஆல்பம்- 30

 

loading...

Advertisement

Advertisement

Advertisement