தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இல்லத்திற்குள் மழை நீர் புகுந்தது.
நீதித்துறையிலிருந்து நேரடி அரசியலுக்குள் நுழைந்துள்ள ரஞ்சன் கோகாய், அசாம் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1978 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய அவர், கவுகாத்தி உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என படிப்படியாக வளர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியானார்.
கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற அவருக்கு தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அசாமில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதற்கு ரஞ்சன் கோகாய் வீடும் தப்பவில்லை. திப்ரூகார்க் நகரில் உள்ள பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 25 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த மழைநீரானது உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யின் வீட்டிற்குள் புகுந்தது. இல்லத்திலிருந்த கோகாய்யின் வயதான தாயார் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக திப்ரூகார்க் மாவட்ட துணை காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Loading More post
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!