மதுரை : பாஜக பிரமுகர் வீட்டிற்கு சென்று தாக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை பாஜக இளைஞர் அணி நிர்வாகியை அவரது வீட்டிற்கே சென்று திமுக எம்.எல்.ஏ மூர்த்தி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.


Advertisement

மதுரை புறநகர் பாஜக இளைஞர் அணி கோட்ட பொறுப்பாளரும், ஹோமியோபதி மருத்துவருமான சங்கரபாண்டி ஊமச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்ற மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி, தன்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களையும், தான் ஊழல் செய்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்களையும் பரப்பியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் எம்எல்ஏ மூர்த்தி சங்கரபாண்டியையும், அவரது மனைவியும் தாக்க முயன்றதாக தெரிகிறது.

image


Advertisement

அத்துடன் தனது காலணியை கழற்றி தாக்க முயலும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காட்சிகள் சங்கரபாண்டி வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து சங்கரபாண்டியை தொடர்புகொண்டு கேட்டபோது, தான் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செய்த ஊழலை நேர்மையான முறையில், தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட தாக கூறினார். அதற்காக தன்னை தாக்க முயற்சித்ததுடன், தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து நாளை காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவிதுள்ளார்.

image

இந்த சம்பவம் தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னைப்பற்றி அவதூறான தகவல்களை சங்கரபாண்டியன் பரப்பி வருவதாகவும், ஏன் அவ்வாறு செய்கிறீர்கள் ? என கேட்க சென்றதாகவும் கூறினார். ஆனால் யாரையும் தாக்க முயற்சிக்கவோ ? தகாத வார்த்தைகள் பேசவோ ? இல்லை எனவும், சிசிடிவி காட்சிகள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.


Advertisement

கஞ்சா போதையில் கண்மூடித்தனமாக பைக் ஓட்டிய இளைஞர்கள் : மடக்கிய ஆய்வாளருக்கு காயம்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement