[X] Close >

மோடியாக நடிக்கிறாரா அக்‌ஷய் குமார்? 

Is-Akshay-Kumar-set-to-play-PM-Narendra-Modi-in-Upcoming-Flim-

பாலிவுட் பிரபலமான அக்‌ஷய்குமார் பிரதமர் மோடியின் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Advertisement

இந்தித் திரை உலகில் பிரபலமான அக்‌ஷய் குமார் 2.0 படத்தில் ரஜினியுடன் நடிக்க இருப்பதால் தமிழக ரசிகர்கள் மத்தியிலும் அவரைப் பற்றிய டாக் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியைப் பற்றி படம் ஒன்று வெளியாக இருப்பதாகவும், அதில் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அக்‌ஷய் குமார் மோடியாக நடிக்கப் பொருத்தமானவர் என ஆளாளுக்குக் கருத்துச் சொல்லத் தொடங்கி விட்டனர்.
நடிகரும், பாஜக எம்.பியுமான சத்ருகன் சின்ஹா இதுகுறித்து பேசும்போது, ”அக்‌ஷய் குமார் இந்தியாவின் மிஸ்டர் க்ளீனாக கருதப்படுகிறார். ஒளிரும் இந்தியாவின் பிம்பத்துடன் அவரது கதாபாத்திரம் நிச்சயமாக ஒத்துப்போகும்” என்றார்.

மத்திய திரைப்பட சான்றிதழ் ஆணையத்தின் செயலாளரான பங்கஜ் நிஹலானி, ”அக்‌ஷய் குமாரை விட, பிரதமரின் கதாபாத்திரத்தை யாராலும் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது. பிரதமர் மோடியைப் போலவே, மிகச் சாதாரணமான குடும்பத்திலிருந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றவர் அக்‌ஷய் குமார். சமூகத்திற்கு பயன்தரக்கூடிய டாய்லட்:ஏக் ப்ரேம் கதா, பத்மன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நிச்சயமாக பிரதமரின் வேடத்தை, அக்‌ஷய் ஏற்பதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது” என்று கூறியுள்ளார்.


Advertisement

அக் ஷய் குமார் நடித்த டாய்லட்: ஏக் பிரேம் கதா படத்தைப் பற்றி பிரதமரும் பாராட்டி இருக்கிறார். ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close