தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா?: முதலமைச்சர் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, "தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது. முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது கொரோனாவை தடுக்கத்தான். கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்." என தெரிவித்தார். 

image


Advertisement

தொடர்ந்து, தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு, இதுவரை முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். மேலும், “மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில்தான் 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் கொரோனா பரிசோதனை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement