JUST IN

Advertisement

1967 -க்குப் பின் எல்லையில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே கடும் சண்டை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எல்லைப் பகுதியில் 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - சீனா இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது 


Advertisement

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு வரை சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எல்லையில் தனது படைகளைக் குவித்தது சீனா. கல்வான் பகுதி வரை சீனா ஏற்கனவே சாலை அமைத்துள்ளது. இரு நாடுகளும் படைகளைக் குவித்ததால் அங்கு பதற்றம் நிலவியது. இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு நிலைமை சீராகி வந்தது.

எல்லையில் அத்துமீறி சீனா தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் : ராணுவ  உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் அவசர ஆலோசனை | ஜனநேசன்


Advertisement

இந்நிலையில், திங்களன்று இரவு திடீரென இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற இந்திய வீரர்கள் இரும்புக் கம்பிகளால் தாக்கப் பட்டனர். சரமாரியாக கற்களையும் வீசி கண்மூடித் தனமாக தாக்கினர் சீன வீரர்கள். இதில் முதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர், 2 வீரர்கள் என 3 பேர் வீர மரணமடைந்தததாக ராணுவம் தெரிவித்தது. இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்த கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர்.

அதன் பின்னர் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்ட ராணுவம் , சீன ராணுவத்தினரின் கல்வீச்சு மற்றும் இரும்புக் கம்பி தாக்குதலில் படுகாயமுற்ற மேலும் 17 பேர் உயரமான பகுதியில் நிலவும் உறைய வைக்கும் கடுங்குளிரால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் காயங்களால் உயிரிழந்ததாகவும் தெரிவித்தது. எனினும் மோதலில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து ராணுவ அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இருதரப்பும் கற்கள், இருப்பு கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. கல்வான் பகுதியில் குவிக்கப்பட்ட படைகளை இரு நாடுகளும் விலக்கிக் கொண்டுவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம்


Advertisement

சீன ராணுவத்தினருக்கும் அதேஅளவு உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை மீட்க அந்த நாடு இந்திய எல்லைப்பகுதியில் ஹெலிகாப்டர்களை இயக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 1967 ஆம் ஆண்டு, இதேபோல சிக்கிம் எல்லையான நாது லா பகுதியில் சீனா அத்துமீறியபோது, இந்திய வீரர்கள் அதை எதிர்கொண்டனர். அப்போது ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்தியா தரப்பில் 80 வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனா 300 வீரர்களை இழந்தது. அதன் பிறகு தற்போதுதான், இந்தியா - சீனா இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement