(கோப்பு புகைப்படம்)
சென்னையில் கடந்த 2 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றும் செவிலியர்கள் 155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் சென்னையில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. நேற்று மட்டும் சென்னையில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் மட்டும் கடந்த 2 மாதங்களில் 155 செவிலியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 செவிலியர்களும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 45 செவிலியர்களும், ஸ்டான்லி மருத்துவமனையில் 30 செவிலியர்களும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 செவிலியர்களும், கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் 5 செவிலியர்களும், தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் 6 செவிலியர்களும், தண்டையார்பேட்டை ஆர்எஸ்ஆர்எம்-ல் 4 செவிலியர்கள் என மொத்தம் 135 பேர் சிகிச்சையில் நலம் பெற்று மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர். மேலும் 20 பேர் மருத்துவமனைகள், ஐஐடி காப்பகம் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே 56 வயதான செவிலியர் கண்காணிப்பாளர் ஒருவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிடி ஸ்கேனில் அவருக்கு கிரேடு 3 பாதிப்பு என தெரிய வந்ததால், தற்போது செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருகிறது.
விபத்தால் வெடித்த டேங்கர் லாரி : 18 பேர் உயிரிழப்பு, 189 பேர் காயம்..!
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!