‘விஜய் பிறந்தநாளுக்கான டிபி’: ட்விட்டர் ட்ரெண்டில் தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஜய் பிறந்தநாள் காமன் டிபி-யை 20 முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வெளியிட்டு உள்ளனர்.


Advertisement

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். வரும் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

image


Advertisement

இப்போது அதன் ஒரு பகுதியாக விஜய் பிறந்தநாள் காமன் டிபி இன்று வெளிவந்தது. அது தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் "மாஸ்டர்" படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார், மோகன்ராஜா, சாந்தனு, ஹேமா ருக்மணி, அஜய் ஞானமுத்து, ஆண்ட்ரியா, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உள்பட சினிமா துறையின் 20 பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட்டு உள்ளனர்.

நடிகர் விஜய்க்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதன் காரணமாக #THALAPATHYBdayFestCDP மற்றும் #Master ஆகிய ஹேஷ்டேக்குகள் தற்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை இரண்டிலும் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ட்விட்களை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Image


Advertisement

ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் படத்தின் அப்டேட் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement