காதலை நிராகரித்த டிவி நடிகை… இயக்குநர் தற்கொலை முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னட நடிகரும், இயக்குநரும், தயாருப்பாளருமான ஹுச்சா வெங்கட், தனது காதலை நடிகை நிராகரித்ததால் தனது பண்ணை வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
கன்னட தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வரும்பவர் நடிகை ரச்சனா. இந்த ஷீவை தயாரித்து வருகிறார் ஹுச்சா வெங்கட். இந்நிலையில் அவர் நடிகை ரச்சனாவிடம் தனது காதலை தெரிவித்து உள்ளார். அவரது காதலை ரச்சனா ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்த வெங்கட் தற்கொலை செய்ய முடிவெடுத்து  இருக்கிறார். இதனையடுத்து தனது பண்ணை வீட்டிற்கு சென்ற வெங்கட் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ரச்சனாவிற்கு செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பி விட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பின்னர், அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரச்சனா கூறுகையில், ’ ஹூச்சா வெங்கட் தனது காதலை வெளிப்படுத்தினார். அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த எண்ணத்தில் அவருடன் பழகவுமில்லை’ எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement