JUST IN

Advertisement

சென்னை: தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமானவருக்கு மீண்டும் கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒருமுறை தொற்று  ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமான இளைஞருக்கு  மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

image 

தண்டையார்பேட்டையை சேர்ந்த 24 வயது இளைஞர் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் 15 நாட்கள் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு கடந்த மே 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் கொரோனாத் தொற்று நீங்கியது உறுதியானது. இதனையடுத்து அவர் வீடு திரும்பினார்.


Advertisement

image 

இந்நிலையில் அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து புரசைவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞருக்கு  அப்பன்டிக்ஸ் எனும் குடல்வால் அழற்சி நோய் இருப்பதை உறுதி செய்தனர். அத்துடன் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் மருத்துவர்கள்  சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் , ராஜீவ்காந்தி மருத்துவமனையில்  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 8 மிமீட்டர் குடல்வால் அழற்சி இருப்பதாக கூறி அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இம்முறை அவருக்கு கொரோனா தொற்று இருந்த போதும் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement